districts

img

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான மொபைல் வாகனங்கள் கோவை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்

கோவை, ஏப். 12 -   மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் கொரோனா தடுப்பூசி போடு வதற்கான மொபைல் வாகனங் களை மாநகராட்சி ஆணையர் குமா ரவேல் பாண்டியன் திங்களன்று கொடியசைத்து  துவக்கி வைத் தார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்ட மிடப்பட்டுள்ளது எனவும்,மாந கராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  தெருக்களுக்கு நேரடியாக போய் தடுப்பூசி போட  உள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 வாக னங்கள் என 5 மண்டலங்களுக்கு வாகனங்கள் மூலம் தடுப்பூசி அனுப் பப்பட்டுள்ளது

தொழில்கூடங்கள், பெரிய நிறுவனங்கள், குடி யிருப்போர் நல சங்கம், பொது மக் கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பு ஊசி போடப்படும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி் போட நட வடிக்கைகள் எடுத்து வருவ தாகவும், தனியார் மருத்துவ மனைகளிலும் ஊசி தேவையான அளவு வைக்கப்பட்டு இருக்கின் றது.  தினசரி மார்க்கெட் பகுதிகளில் 50 சதவீத கடைகள் மட்டுமே இயங்க வேண்டும்.  மார்கெட் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முகக்கவசம் அணி யாதவர்களுக்கு  அபராதம் விதித்து  கொண்டு இருக்கிறோம். முகக் கவசம் அணியாமல் இருந்தால்  200  அபராதம் விதிக்கப்படும். பேருந் துகளில் முகக்கவசம் அணியாமல் பயணிகளை ஏற்றினால் நடத்து னர், ஓட்டுனர்களுக்கு 500 ரூபாய் அப ராதம்  விதிக்கப்படும்.  கோவை மாநகரில்  20 லட்சம்  பேர் வசிக்கின்றனர்.

மக்கள் தொகை  அடர்த்தி காரணமாகவே கொரோனா தொற்று அதிகமாக கோவையில் பரவி வருகின்றது. தற்போது 1500 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றது. இதை 3000 படுக்கையாக அதிகரிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இரு தினங்களில் அந்த பணி நிறைவடையும். பூங்கா ,  குளங்களில் மக்கள் கூட்டம் கூடு வதை கட்டுப்படுத்த முடியாத  நிலை  ஏற்பட்டால்  மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி அங்கு பொது மக்கள் செல்ல முழுமையாக தடை  விதிக்கப்படும் என்றார்.

;