districts

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

சேலம், ஜூலை 20- மழைப்பொழிவு வெகுவாக குறைந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரானது  அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்நிலையில், புதனன்று அணைக்கு விநாடிக்கு 142 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், வியாழனன்று அணைக்கு வரும் நீரின் அளவு 176 கன அடி யாக இருந்தது. இந்நிலையில், வெள்ளி யன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு  107 கன அடியாக குறைந்துள்ளது.