districts

img

அற்றைத் தமிழரின் பண்பாட்டுச் செழுமை மேனாள் ஐஏஎஸ் கோ.பாலச்சந்திரன் பேச்சு

ஈரோடு, ஆக. 9- ஈரோடு மாவட்டத்தில் புத்தக திருவிழா பெரும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில், மேங்கு வங்க மாநில மேனாள் கூடுதல் தலைமை செயலாளர் கோ.பாலச்சந்திரன் உரையாற்றி னார். ஈரோடு புத்தக திருவிழாவின் ஒருபகுதியாக பல்வேறு ஆளுமை கள் பங்கேற்று கருத்துரையாற்றி வருகிறார்கள். இதன்ஒருபகுதி யாக எங்கிருந்தோம், எங்கிருக்கி றோம், எங்கே செல்ல வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத் தரங்கிற்கு, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.சின்னசாமி தலை மை ஏற்றார். இதில், மேங்கு வங்க மாநில மேனாள் கூடுதல் தலைமை செயலாளர் கோ.பாலச்சந்திரன் பேசுகையில், பல நூறு ஆண்டுக ளுக்கு முன்போ, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ நாம் எங்கிருந்தோம், நம் பழைமை எத்த கையது? என்பதை அறிய வேண் டிய தேவை என்ன? தன்னை அறி தலை நோக்கி ஏன் பயணிக்க வேண் டும்?. ஒரு மனிதனோ, ஒரு குழுமமோ அல்லது ஓர் இனமோ முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டின் அதற்கு முதல் படி தன்னை அறிதல் ஆகும். இந்த முயற்சி வாழ்ந்து கொண்டிருப்போரை விழிப்புற வைக்கும். வீழ்த்த பட்டோமோ என்று தளர்ச்சி அடைவோரை, அவர் தம் முந்தைய பண்பாட்டு பெருமைகளை பீடு நிறை, மாண்பு நிலை வாழ்க்கையினை நினைவு கூர்ந்து வீறு கொண்டு எழ வைக் கும்.  அற்றை தமிழர் தம் உன்னத நிலையினை நாம் எப்படி அடைய வேண்டும் என்பதனை உணரலாம். முன்னோர்களின் பண்பாட்டு செழு மையைப் பற்றி நாம் அறிவதற்கான பழந்தமிழ் இலக்கியங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் இயற்றப்பட்ட தாக அறியப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை. இன்னும் அகழாய் வுகள் நிகழும் போது இன்னும் பின்னோக்கிய காலத்தைச் சேர்ந் தவை என்ற கோட்பாட்டிற்கும் நாம் வரலாம்.  பழந்தமிழ் இலக்கியங்கள் காத லையும், போர்த்திறத்தையும் மட் டுமே சொல்லியிருப்பதாக பரவ லாக உள்ள ஓர் கருத்து கற்றறிந்த வர்களால் கூட வன்மையாக மறுத் துக் கூறப்படவில்லை. அகநானூறு என்றால் காதல் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது. புறநானூறு நம்மு டைய போர்த்திறமையைக் கூறுகி றது என்று தான் பொதுவாக அறியப் பட்டிருக்கிறது. ஆனால் அப்படி இல்லை. புறநானூற்றை மட்டுமே பார்த்தால் கூட மனித மாட்சி, நீர் மேலாண்மை, கற்றவர் சிறப்பு, மழ லையர் போற்றல், முறையாக அர சாளும் நெறிமுறைகள் என்ற பல கோட்பாடுகள் குறிப்பிடப் பெற்று இருக்கின்றன. இவை அனைத்தினும் மேலாய், அனைத் துலகும், அனைத்து மானிடமும் எம் அங்கம் என்று உணர்ந்து தெளிந்த தும் அற்றைத் தமிழர் தம் போக் காய், வாழ்வியல் நெறிமுறையாய் இருந்ததும் கூறப்பட்டிருக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தலையாளங்காணத்து செறுவென்ற நெடுஞ்செழிய பாண் டியன் என்ற அரசனை எதிர்த்து சேரர் கள், சோழர்கள் ஒரு யுத்தம் நடத்தி னர். வேளிர் என்ற சொந்தக்காரர் கள் பாண்டியனுடன் இருந்தனர். பகைவரிடமிருந்து என் மக்களை பாதுகாக்காவிடில் வரலாறு என்னை வசைபாடட்டும் என்று கவிதை பாடினார். புலவர் பெருமக் கள் என்னை புகழ்ந்து பாடும் பெரு மையை நான் இழப்பேனாக என் றார். அதுதான் என்னுடைய மிகத் தாழ்ச்சியான நிலையாக இருக் கும் என்றார். இதுதான் அற்றைத் தமிழர் நிலை எப்படி இருந்தது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம், என்றார்.