districts

img

மாதர் சங்க பேரவைக் கூட்டம்

திருப்பூர், ஜன.20- மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பேரவைக் கூட்டம்  திங்களன்று நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர்  மாவட்ட பேரவைக் கூட்டம், திங்களன்று மாவட்டத் தலைவர்  பவித்ரா தலைமையில் பி.ஆர்.நிலையத்தில் நடைபெற்றது. சரஸ்வதி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். புதிய மாவட்டச் செயலாளராக பானுமதி தேர்வு  செய்யப்பட்டார். முடிவில், மாவட்டப் பொருளாளர் கவிதா  நன்றி கூறினார்.