districts

img

பொதுப்பாதை அடைப்பு: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ.20- திருச்செங்கோடு அருகே உள்ள மாரப்பம்பாளையத்தில் விவசாய குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த  பட்டா பொது பாதையை, தனிநபர் அடைத்து வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள இலுப் புலி கிராமம், மாரப்பம்பாளையம் முதல் செனப்பள்ளிகாடு, பெராங் காடு, சீலபிலாக்காடு ஆகிய வழி யாக 10க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டு களாக இந்த பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நி லையில் பாதையில் நுழைவு அரு கில் வசிக்கும் தனி ஒரு நபர் அதனை அடைத்து வைத்து பொதுமக்கள் செல்ல முடியாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று கொண்டுள்ளது. இவ் வழக்கில் பொதுமக்கள் சென்று வரும் பாதை எப்படி இருந்ததோ அதே நிலையில் ஸ்டேட்டஸ் கோ இருக்க வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மீறி பாதையை அடைத்துள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும்.  பொதுமக்கள் சென்று வந்த பாதை யில் செல்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்புலி கிராம நிர்வாக அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஆர்.ரவி தலைமை  வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ்,  மாவட்டக்குழு உறுப்பினர் ஜீ.பழனி யம்மாள், மேற்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், சத்யா நகர்  கிளைச் செயலாளர் பி.கே.ரவி உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் ராதிகா நன்றி கூறினார். முன்னதாக, கிராம  நிர்வாக அலுவலர் தீபன் ராஜிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.