districts

தஞ்சாவூர் மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கு எதிரானது

கி.வீரமணி குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஜூன் 16- நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கு எதி ரானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், மாநில உரிமைக்கு, சமூக நீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வு களைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது: பாஜக ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு உள்ளிட்டவற்றை அறிவித்து வரு கிறது. கல்வி அறிஞர்கள் அல்லாத வர்களைக் கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமு தாயங்களைச் சார்ந்த நடுத்தர, ஏழை மாணவ, மாணவிகள் பலியாகி வரு கின்றனர். தற்கொலை சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது. பல்கலைக்கழ கங்கள் தான் தேர்வுகளை நடத்த வேண்டும். ஆனால், இவர்களே ஒரு குழுவை அமைத்து நீட் தேர்வை நடத்து கின்றனர். இது எந்த வகையில் நியாயம். சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். மேலும் பெரும்பான்மையோர் பேசும் இந்தி மொழியை அனைவரும் படிக்க வேண் டும் என திணிக்கின்றனர். இது ஒரு கலாச் சார திணிப்பு. குலக் கல்வி முறை ஒழிக் கப்பட்டு, பின்னர் காமராஜரால் பள்ளி கள் திறக்கப்பட்டன. இப்போது, மீண்டும் பள்ளிகளை மூடும் விதமாகப் புதிய கல்விக் கொள்கை உள்ளது. நீட் தேர்வு போன்று கலைக் கல்லூரிகளிலும் தேர்வு நடத்துவதற்கான அம்சம் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் இல்லை. இப்போது குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீ ருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலை உள்ளது. இப்போது வந்துள்ள ஆபத்தை எதிர்த்து வழக்கம் போல திராவிடர் கழகம் குரல் கொடுத்து வரு கிறது” என்றார் கி.வீரமணி. ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செய லர் ச.சொக்கா ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி திறந்து இரண்டு வாரம் ஆகியும் பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

மதுரை, ஜூன் 16- தமிழக முழுவதும் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்காதது மாணவர்களின் கல்வி நலனை வெகுவாக பாதிக்கிறது. அவர்களுக்கு விரைவாக பாடப்புத்த கங்கள் வழங்கவேண்டுமென தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் சனிக்கிழமை மாநிலத் தலைவர் மு.மணிமேகலை தலைமை யில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில், மாநிலப் பொரு ளாளர் க.ஜோதிபா விளக்கி பேசினார். துணை பொதுச் செயலாளர் தா.கணே சன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில்,  புதிய கல்வி யாண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப் பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலை யிலும் தமிழகம் முழுவதும் பெரும் பாலான வகுப்புகளுக்கு பாடப் புத்த கங்கள் இதுவரை வழங்காதது மாண வர்களின் கல்வி நலனை வெகுவாக பாதிக்கிறது  விரைந்து புதிய பாடப் புத்த கங்கள் வழங்க தமிழக அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  நடுநிலைப் பள்ளிகளுடன் இணை ந்து அங்கன்வாடிகளில் தொடங்கப் பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்பு களில் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உபரியாக இல்லாத ஆசிரியர்களை நிய மிப்பதாலும் மாணவர் எண்ணிக்கை யைக் காரணம் காட்டி ஈராசிரியர் பள்ளி களில் இருந்து ஓர் ஆசிரியரை அங்கன் வாடிக்கு நியமனம் செய்வதாலும், நூற்றுக்கணக்கில் இடைநிலை ஆசிரி யர்கள் பணியிடம் காலியாக உள்ள ஒன்றியங்களிலும் அங்குள்ள இடை நிலை ஆசிரியர்களை அங்கன்வாடி களுக்கு நியமனம் செய்ததாலும் தொடக்கக்கல்வித்துறையில் ஒன்று  முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாண வர்களின் கல்விநலன்  வெகுவாக பாதிக் கப்படும் என்பதால் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 இடைநிலை ஆசிரி யர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவர்களது குடும்ப நலனையும், அவர்களது எதிர் காலத்தையும் வாழ்வாதாரத்தையும் தமி ழக அரசு பாதுகாக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.