சேலம், டிச. 3 - பாலிசிதாரர்களின் போனசை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அகில இந்திய ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் செவ் வாயன்று ஈடுபட்டனர். பாலிசிதாரர்களின் போனசை உயர்த்திட வேண்டும்/ பாலிசியின் மீதான கடன் வட்டியை குறைக்க வேண் டும். பழைய கமிஷன் முறையை தொடங்கிட வேண்டும். பாலிசி பிரிமி யத்தை குறைத்திட வேண்டும். பாலிசி நுழைவு வயதினை 65 ஆக உயர்த்திட வேண்டும். அனைத்து முகவர்களுக் கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண் டும். முகவர்களுக்கும் விபத்து காப் பீடு 10 லட்சமாக வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கம் அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானம் பகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் கோட்டத் தலைவர் இளையப்பன் தலைமை ஏற்றார். பொதுச் செயலாளர் அமுதன் வரவேற்றார். இதில், தென் மண்டலத் தலைவர் கலைச்செல்வன், துணைத் தலைவர் தர்மலிங்கம், தென்மண்டல முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட் டத் தலைவர் நரசிம்மன் உள்ளிட் டோர் உரையாற்றினர். கோவை கோவை, ஈரோடு, திருப்பூர், நீல கிரி ஆகிய மாவட்டங்களை உள்ள டக்கிய கோவை கோட்ட ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று கோவை மாவட் டம், செஞ்சிலுவை சங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில், கோவை கோட்ட ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்கத் தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான முகவர்கள் பங்கேற்று கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.