districts

img

“உரிமை காக்க மௌனம் உடைப்போம்” கருத்தரங்கம்

கோவை, ஜூன் 21- குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்டுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து, “உரிமை காக்க மௌனம் உடைப் போம்” என்கிற சிறப்பு கருத்தரங்கம் கோவையில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் நடை பெற்றது.  குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாதர் சங்கம் களம் கண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஜூன் 17 முதல்  22ஆம் தேதி வரை தமிழக முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதி ரான பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, கோவை, கணபதி பகுதியில் உள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில், சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி மணி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி வரவேற்றார். இதில் மாதர் சங்கத்தின் அகில இந் திய துணைச்செயலாளர் பி.சுகந்தி பங் கேற்று, உரிமை காக்க மௌனம்  உடைப் போம் என்ற தலைப்பில் கருத்துரை யாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், நாடெங்கும் அச்சு ஊடங்களிலும் காட்சி ஊடகங்களிலும், ஒவ்வொரு முறையும் குழந்தைகள் மீதான வன்முறை செய் திகளை பார்க்கும்போது மனம் பதை பதைக்கிறது. குறிப்பாக பெண் குழந் தைகள் மீதான வன்முறை என்பது வீடு களில், பள்ளிகளில், பொது இடங்களில் என எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு வகையில் குழந்தைகள் வன்முறை களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அண் மையில், சென்னையில் குழந்தைகளை பாலியல் வணிகத்திற்கு ஈடுபடுத்திய செய்தி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது. குழந்தைகள் மீதான வன் முறைகளைத் தடுத்து நிறுத்த அரசும் சமூகமும் கூடுதல் பொறுப்போடும் அக் கறையோடும் செயல்பட வேண்டி இருக் கிறது. குழந்தைகள் மீதான வன்முறை  வழக்குகள் வருகிற போது காவல்துறை உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தொடர் கவனம் செலுத்துவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் நம்பிக்கையூட்டும் வகையில் காவல்  துறை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறைக ளுக்கு மிக முக்கிய காரணமாக இருப் பது போதை பழக்கவழக்கங்கள் என் பது ஆய்வில் தெரிய வருகிறது. தமி ழகம் முழுவதும் போதை பொருட்களின் நடமாட்டத்தை தடை செய்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்க ளில் பெண் குழந்தைகள் மீதான வன் முறை நடைபெறுகிற போது உடனே தக வல் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண் (1098) குறித்த விளம்பரங்களை அதிகமாக செய்திட வேண்டும். கல்வித் திட்டத்தில் பாலின சமத்துவம் மற்றும் பதின் பருவ வளர்ச்சி குறித்தும் கற் பித்தல் வேண்டும். பாலியல் கல்வி என்ப தாக இல்லாமல் பாலியல் நீதி என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். உடனடி யாக குழந்தைகள் நல ஆணையத் திற்கு தலைவரை நியமிக்க வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியோடும், பாது காப்போடும் வாழத் தகுந்த சூழலை அர சும் பெற்றோரும் சமூகமும் இணைந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட முடியும் என்றார். இக்கருத்தரங்கில் மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சுதா, பொரு ளாளர் உஷா, மாவட்ட நிர்வாகிகள் சாந்தா, வனஜா, ரேவதி, சாமுண்டீஸ் வரி, ஜீவாமணி, அமுதா, தங்கமணி, மெஹபூநிஷா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முன்னதாக, மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தியும், கள்ளக் குறிச்சி விஷச்சாராய கொடூரத்திற்கு எதிராக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை புலிய குளம் பெரியார் சிலை அருகே நடை பெற்ற இவ்வியக்கத்தில் திரளானோர்  பங்கேற்றனர். இதேபோன்று, குழந்தை கள் மீதான வன்முறையைத் தட்டிக் கேட் போம், தடுத்து நிறுத்துவோம் என்கிற பிரச்சார இயக்கம் சத்தியமங்கலம் வட் டம், அம்பேத்கர் நகரில் மாதர் சங்கத் தின் கிளைத் தலைவர் ஜோதி தலைமை யில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது.

;