districts

img

மறைந்த தலைவர் பி.கே.சுகுமாறன் நினைவேந்தல்

கோவை, ஜன.10- சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் பி. கே.சுகுமாறன் முதலாமாண்டு நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட் டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டு புகழஞ் சலி செலுத்தினர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் அமைத்து ஆட்டோ ஓட்டுநர் களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதை காக்க பாடுபட்டவர் தோழர் பி.கே.சுகுமாறன். இதனிடையே அவ ரின் முதலாமாண்டு நினைவு தினம் புத னன்று கோவை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 100க்கும் மேற் பட்ட ஆட்டோ ஸ்டேண்டுகளில் படத் திறப்பு விழா நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள ஆட்டோ ஸ்டேண்ட்டில் சங்க பெயர் பலகை திறப்பு விழா ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் ஆர். செல்வம் தலைமையில் நடைபெற் றது. எம்.கே.முத்துக்குமார் வரவேற் புரையாற்றினார். சங்கத்தின் பெயர் பலகையை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் திறந்து வைத்தார். இதன் பின், தோழர் பி.கே.சுகுமாறனின் திரு வுருவப்படத்திற்கு சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கண் சிகிச்சை முகாம், கண் கண்ணாடி வழங்கு தல், பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் நிகழ்ச்சிகளில் சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் வேலுச்சாமி ஆகியோர் பங் கேற்று பி.கே.சுகுமாறனின் சங்க பணி கள் குறித்து உரையாற்றினர். இதில், அவருடைய குடும்பத்தினர், ஏபிடி ஆறுமுகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.