districts

img

மேட்டூர் அணையை ரசித்த மழலையர்கள்

சேலம், மே 24- மேட்டூர் அணையை பாலர் பூங்கா அமைப் பினர் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.  மேட்டூர் அணையை பற்றி அறிந்து  கொள்ள சேலம் வடக்கு மாநகர் பாலர் பூங்கா அமைப்பின் சார்பில், 54 சிறுவர்கள் பயண நிகழ்வு திட்டமிடப்பட்டது. ஆர்.வி.கதிர்வேல் தலைமையில், பாலர் பூங்கா மாவட்ட ஒருங் கினைப்புக்குழு கே.ஜோதிலட்சுமி பய ணத்தை துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் மாநகர செயலாளர் பிரவீன்குமார், ஒருங்கி ணைப்பாளர் கே.ராஜாத்தி மற்றும் ஆசிரியர் கூடல்மணி ஆகியோர் பங்கேற்று, மேட்டூர் அணையின் வரலாறு குறித்து குழந்தை களுக்கு தெரிவித்தனர். மழலையர்கள் மேட் டூர் அணையை நேரில் கண்டும், அதன் வர லாற்றை தெரிந்து கொண்டும் மகிழ்ச்சி அடைந் தனர்.