சேலம், டிச.3- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் களில் ஒருவரும், முன்னாள் மாநில பொதுச் செயலாள ருமான கே.ஆர்.சங்கரன் நினைவேந்தல் கூட்டம் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் நடை பெற்றது. முன்னதாக மறைந்த தலைவர் கே. ஆர். சங்கரனின் உருவப்படத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தில் அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம் ஆகி யோர் பேசினர். இதில் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் சி.முருக பெருமாள், மாவட்ட இணை செயலாளர் திருநா வுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்று மறைந்த தலை வருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.