districts

தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற சொன்னது அராஜகமாம்!

சேலம், மார்ச் 28- தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடை முறைகள் அமலில் உள்ளதால், காரில் கட் டப்பட்டிருந்த கட்சி கொடியை அகற்றுமாறு அறிவுறுத்தி போலீசாருடன், பாமக வேட் பாளர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 39  வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல்  செய்திருந்தனர். இந்நிலையில், வியாழ னன்று வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தலை மையில் நடைபெற்றது. இதில் 39 வேட் பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது பாமக வேட் பாளர் அண்ணாதுரையும் பங்கேற்றிருந்தார். அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, புறப்பட்டு செல்லும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை யினர், வாகனத்தில் இருந்த கட்சி கொடி யினை அகற்றும்படி அறிவுறுத்தினர். குறிப் பாக, கட்சியின் கொடி வைப்பதற்கான கால அவகாசத்திற்கு முன்பாகவே வாகனத்தில் கொடி பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி னர். இதனால் காவல் துறையினருக்கும், பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இத னிடையே மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவ லர் அறைக்கு சென்று புகார் தெரிவிக்க  வந்த நிலையில், உள்ளே அனுமதிக்கப் படாத நிலையில் வெளியே வந்த பாமக  வேட்பாளர் அண்ணாதுரை காவல்து றையினர் முறையாக தேர்தலை நடத்த விட மாட்டார்கள் என்றும், காவல் துறையி னர் அராஜகத்தில் இருப்பதாக ஈடுபடுவதாக வும் கதறியுள்ளார். இதன்பின் பாமக வேட்பா ளர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இத னால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித் தது. பாமக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு முன்னதாக, பாமக வேட்பாளர் அண்ணா துரை புதனன்று வேட்புமனு தாக்கல் செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதன்பின் அண்ணாதுரையும், மேலும் சிலரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே சென்றனர். அப்போது அவருடன் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தாங்களும் வேட்புமனு தாக் கல் செய்ய உள்ளே வருவோம் என போலீசா ருடன் தகராறு செய்தனர். இவர்களை காவல் துறை அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாமக  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்புறம் நின்று போலீ சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இச்சம்பவம் குறித்து சேலம் நகர  காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு, பாமக வேட்பாளர் அண்ணா துரை உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

;