நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
மேட்டுபாளையம், ஜூன் 9- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.49 லட்சத்து 51 ஆயிரம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட தாக மருதூர் ஊராட்சித் தலைவர் மீது 7 பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதன், ஊராட்சி தலைவராக பூர்ணிமா ரங்கராஜ் உள்ளார். காரமடை பகுதி புஜங்கணூர் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் ஜெயராம் என்பவர், நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு துறையினரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை யினர் விசாரணை நடத்தினர். இதில், ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.49 லட்சத்து 51 ஆயிரம் கையாடல் செய்து மோசடியில் ஈடு பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் 167, 468, 471, 477 (ஏ), 409 ஐ.பி.சி. அண்டு 13 (2), ஆர்/டபிள்யு 13(1) (0) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காலமானார்
உதகை, ஜூன் 9- நீலகிரி மாவட்ட மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் முஹம்மது கால மானார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும், பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி யின் பந்தலூர் கிளை செய லாளர், விவசாயிகள் சங்கத் தின் நிர்வாகி என பல பொறுப்புகளில் பணியாற்றி யவர் தோழர் முஹம்மது. தனது 84 வயதிலும் மார்க் சிஸ்ட் கட்சியின் உறுப்பின ராக, கட்சியின் மீதான ஈடு பட்டோடு இறுதிவரையில் இருந்தவர். தோழர் முஹம்மது வயது மூப்பின் காரண மாக நீலகிரி மாவட்டம், பந்தலூரில் வெள்ளியன்று காலமானார். இவருக்கு பீபீ என்கிற இணையரும், நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தோழர் முஹம்மது அவர்களின் மறைவை யறிந்து விவசாயிகள் சங்கத் தின் தலைவர் என்.வாசு, செயலாளர் யோகன்னன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ஏ.குஞ்சுமுகம்மது, மாவட்டக்குழு உறுப்பினர் வர்க்கிஸ், பந்தலூர் ஏரியா செயலாளர் ரமேஷ் மற்றும் சிஐடியு உள்ளிட்ட வர்க்க வெகுஜன சங்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பருத்தி ஏலம்
அவிநாசி, ஜூன் 9- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7லட்சத்து 75 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ. 7,316 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது.
போலீசார் வாகனங்கள் ஏல அறிவிப்பு
கோவை, ஜூன் 9- கோவை மாவட்ட போலீஸில் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்க ரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பிஆர்எஸ் மைதானத்தில் 17ஆம் தேதியன்று காலை மணிக்கு ஏலம் விடப்படவுள்ளன. ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள வர்கள் 16ஆம் தேதியன்று இரு சக்கர வாகனத் துக்கு ரூ.1000 மற்றும் நான்கு சக்கர வாகனத் துக்கு ரூ.200 முன்பணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகையை ஜிஎஸ்டி-யுடன் அன்றே செலுத் திட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 83000 61781, 9442864108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள் ளார்.
செல்போன் வாங்கிதராததால் மாணவி தற்கொலை
ஈரோடு, ஜுன் 9- பவானி வட்டம், சிங்கம்பேட்டை அருகே சின்னக்காட்டூரைச் சேர்ந்த மாணவி(14). இவர் சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துள்ளார். விடு முறையில் மாணவி அதிக நேரம் செல் போனை பார்த்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். மேலும், கடந்த வாரம் செல்போனை வாங்கி உடைத் துள்ளார். வேறு செல்போன் வாங்கி தர சொல்லி மாணவி அடம் பிடித்துள்ளார். ஆனால் செல்போன் வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி 5ஆம் தேதி மாலை கலைக் கொள்ளி மருந்தை குடித்துள்ளார். இதனையடுத்து, அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர். மாணவியின் உடல் நிலை மேலும், மோசமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்து பார்த்தபோது, வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.