ஈரோடு, ஆக.8- ஒப்பந்தப்படி பீடி தொழிலா ளர்களுக்கு புதிய கூலி உயர்வை வழங்க வேண்டும், மறுக்கும் உரி மையாளர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு பீடி, சுருட்டு தொழிலாளர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர் சங்க 55 ஆவது மாநாடு ஈரோடு சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கைபானி தலைமை வகித்தார். பீடி தொழிலாளர் சம் மேளன மாநிலப் பொதுச்செயலா ளர் திருச்செல்வன் தொடக்க உரை யாற்றினார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் வாழ்த்தி பேசி னார். வீடு இல்லாத பீடி தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, வீடு கட்ட நிதி ஒதுக்க வேண் டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி புதிய கூலி உயர்வை வழங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுக்கும் உற்பத்தியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும். பீடி மீது விதித்துள்ள 28 விழுக் காடு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக பி.சித்தாரா பேகம், செய லாளராக ஆர்.செந்தில்குமார், பொரு ளாளராக எஸ்.ஷாஜாதி உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஜோதிமணி உரை யாற்றினார். இதில் ஏராளமான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.