தருமபுரி, ஏப்.3- பணி பளுவின் காரணமாக இறந்த ஊழியரின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை, கருணை அடிப்படையில் வழங்க வலியுறுத்தி அமைச்சு பணியாளர் சங்கத்தினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார் பில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் ரேகா தலைமை வகித்தார். இதில், மாநில செயலாளர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். வேளாணமைத்துறையில், பணி பளுவின் காரணாமாக இறந்த அரசு ஊழியர் சண்முகவேல் குடும்பத் திற்கு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஐஎப்எச்ஆர் எம்எஸ் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செய லாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளா ளர் பி.எஸ்.இளவேனில், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.