districts

img

உதகை: விடுதிகளின் கட்டணங்கள் உயர்வு மாவட்ட நிர்வாகம் அலட்சியம் என குற்றச்சாட்டு

உதகை, மே 12- உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்ப தாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர். சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலங்க ளில் ஒன்றான மலைகளின் இளவரசி என்ற ழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக் கத்திலிருந்து சற்று இதமான கால நிலையை அனுபவிக்க, உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கியி ருந்து, அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதற்காக இணையதளம் மூல மாகவும், நேரடியாகவும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்குகின்ற னர். மேலும், உதகை மற்றும் சுற்றுவட்டார பகு திகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், தனியார் காட்டேஜ்கள் மற்றும் நட்சத்திர விடு திகள் உள்ளன. தற்போது மே மாதம் முதல் கோடை விழாக்கள் துவங்கியுள்ளதால்,

அதனை கண்டு ரசிக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், உதகையில் தங்கும் விடு திகளில் அறைகளின் வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 1500 ரூபாய் மதிப்புள்ள அறையின் வாடகை 4500 ஆயி ரம் ரூபாயும், 2500 ரூபாய்க்குரிய அறையின் வாடகை 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், தனியார் காட்டேஜ் களில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட் டுள்ளன. வார இறுதி நாட்களில் கட்டண மானது கண்மூடிதனமாக உயர்த்தப்பட்டு வருவதால், நடுத்தர சுற்றுலா பயணிகள் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும் பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் 4  நாட்கள் தங்க வேண்டிய இடத்தில் விடுதி கட் டணங்கள் உயர்வால் 2 நாட்கள் மட்டும் தங்கி  சுற்றுலா தலங்கள் அனைத்தையும் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து  செல்கின்றனர். மேலும், பல சுற்றுலா பயணிகள் வாக னங்களில் சாலைகளிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் அனைத்து தங் கும் விடுதிகளிலும் அறை கட்டணங்களை நிர்ணயித்து, அந்த கட்டணத்தை வெளிப் படையாக விடுதிகளில் போர்டுகளை வைக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.