districts

img

தமிழ்துறை போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

அவிநாசி, டிச.28- அவிநாசியில் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளி யன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் அவிநாசி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து முத்தமிழ் அறிஞர்  கலைஞர் நூற்றாண்டுத் தமிழ் மன்ற விழா  கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் தமிழ்  வளர்ச்சித் துறை 5 லட்சம் ரூபாயை வைப்புத்  தொகையாகக் கொடுத்து, இதில் வருகின்ற வட்டித் தொகையை ஆண்டுதோறும் மாண வர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசு வழங் கப்பட்டு வருகிறது. 2024-2025ஆம் கல்வி யாண்டிற்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் டிசம்பர்  17 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 200 மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர்.  இவர்களின் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் முறையே ஒவ்வொரு பிரிவிலும் செ.தமிழ்,  சா.தரணீதரன், மு.கீர்த்தனா ஆகியோர் முதல் இடம் பெற்று தலா ரூ.5000 காசோலை யும், சான்றிதழும் பெற்றனர். அதேபோல ஒவ் வொரு பிரிவிலும் ந.தனப்பிரியா, மு. கீர்த்தனா, சி.நர்மதசுவேதா ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று தலா ரூ.3000 காசோ லையும், சான்றிதழும் பெற்றனர். அதே போல் சா.தரணீதரன், செ.தமிழ்அரசன், பி. ரேணுகாதேவி ஆகியோர் மூன்றாமிடம் பெற்று தலா ரூ.2000 காசோலையும், சான்றித ழும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான் றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவினைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோ.நளதம் தலைமை ஏற்று  துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் போ. மணிவண்ணன் விழாவின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மேலும் பிற துறைப் பேரா சிரியர்கள் பா.ஹேமலதா, ந.முகுந்தன், செ. பாலமுருகன், த.ஜெ.அருண், செ.லூயிஸ்,  ந.மணிகண்டன், அலுவலகக் கண்காணிப்பா ளர் நாச்சிமுத்து ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.