districts

img

பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரேசன் கடை திறப்பு விழா

கோவை, ஜன.3- கோவை முன்னாள் நாடாளுன்ற உறுப்பி னர் பி.ஆர் நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி, ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ரேஷன் கடை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு வைக்கப்பட்டது. கோவை முன்னாள் நாடாளுன்ற உறுப்பி னர் பி.ஆர் நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி யில், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வியாழனன்று திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் விகேவி. கார்த்தி கேஸ்வரி சுந்தரராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எல்.திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.பழனிச்சாமி, ஏ.முருகன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.துரைசாமி, சிஐ டியு வடக்கு தாலுகா செயலாளர் ஆர். கேசவமணி, திமுக மேற்கு ஒன்றியச் செயலா ளர் சிஎம்கே. கிருஷ்ணகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.