districts

img

பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடை திறப்பு

கோவை, டிச.29- நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடையை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கோவை நாடாளு ளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில், கோவை மாநகராட்சி, 63 ஆவது வார்டு 80 அடி ரோடு, ராமநாதபுரம் பகுதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொது விநியோகக் கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.