திருப்பூர், ஏப்.7- பல்லடத்தில், போதுமான தண்ணீர் வழங் கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்து பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில், நீர்மட்டம் குறைந்தும், சில ஆழ் குழாய் கிணறுகள் நீர் வற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போதுமான தண்ணீர் வழங்கவில்லை எனக்கூறி அப்ப குதி பொதுமக்கள் வெள்ளியன்று பல்லடம் தாராபுரம் முக்கிய சாலையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த பல்லடம் போலீசார், பொது மக்களை சமாதானப்படுத்தி விரைவில் போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதை யடுத்து சாலை மறியல் போராட்டம் கைவி டப்பட்டது.