districts

img

தேர்தல் விதி மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை

கோவை, மார்ச் 3 –

சட்டமன்றத் தேர்தல் சுதந்திர மாகவும், ஜனநாயக பூர்வமாகவும் நடைபெறும். மேலும், தேர்தல் விதி மீறினால் பாரபட்சமின்றி சட் டப்படியாக நடவடிக்கை எடுக்கப் படும். அதிகாரிகள் தவறு இழைத் தால் தக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என கோவை மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி  எச்சரித்துள் ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர் தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர் தல் நன்னடத்தை விதிகள் அம லுக்கு வந்துள்ள நிலையில் கோவை மாவட்ட  ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, தேர் தல் நன்னடத்தை விதிகள் அம லுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி களின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்று வரு கிறது.  சட்டமன்றத் தேர்தலை பார பட்சமின்றி அமைதியான முறை யில் நடத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.  ஆயி ரத்து 50 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் கோவை மாவட்டத்தை பொருத்த வரையில் ஆயிரத்து 85 இடங்களில் 4 ஆயி ரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இதில், 112 இடங்களில் உள்ள 788 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டுள் ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்க ளுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுவுடன் ஒரு கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டுள் ளது.  

மேலும், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர் பாக இதுவரை 85 புகார்கள் வந் துள்ளது. இதன்மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட் டுள்ளது. தேர்தல் சமயத்தில் அதி காரிகள் தவறிழைத்தால் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக இந்த பேட்டியின் போது கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள ரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர் உடனிருந்தனர்

;