districts

img

இடங்கணசாலை நகராட்சி: திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இளம்பிள்ளை, பிப்.3- இடங்கணசாலை நகராட்சியில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.  சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சங்ககிரி தாலுகா குழு உறுப்பினர் ஏ.சீனி வாசன் வியாழனன்று நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் வி.கவிதாவிடம் வேட்புமனுவை அளித் தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சேகர், சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.  இதேபோல், 6 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக  சார்பில் போட்டியிடும் மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் பி.மகேந்திரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய் தார். இதில், சண்முகம், ஜெயராமன் உள்ளிட்ட திமுக நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.