districts

img

5 ரூபாய்க்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட் அசத்தும் டீக்கடை: குவியும் மக்கள்

சேலம், ஜூலை 13- சேலம் மாநகரில் மிகக்குறைந்த விலையில் தரமாக டீ, காபி விற்கப்ப டுவதால், தொழிலாளர்கள், எளிய மக் கள் அதிகளவில் மகிழ்ச்சியுடன் பருகிச்  செல்கின்றனர். சேலம் மாநகரம், அம்மாபேட்டை மண்டலம், 32 ஆவது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே சையத் பாபு என்பவரால் ‘கேஜிஎம் டீ  ஸ்டால்’ நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.  இக்கடையில் டீ, காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட், லெமன் டீ. சுக்கு காபி, சுக்கு  பால், உள்ளிட்ட அனைத்து பானங்க ளும் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற் பனை செய்யப்படுவது அனைவரை யும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகி றது.  சாதாரணமாக டீ கடைகளில் டீ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், காபி ரூ.15 முதல் ரூ.20 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. மேலும், தனித்துவமான ‘காபி ஷாப்கள்’ மற்றும் திரையரங்கு களில் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், நட் சத்திர விடுதிகளில் ரூ.300 வரையிலும்  டீ, காபி விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் அன் றாட தேவைகளில் ஒன்றாகிப்போன டீ,  காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட், லெமன் டீ  போன்ற அனைத்து விதமான பானங்க ளும் 5 ரூபாய்க்கு விற்கப்படுவது அனை வரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இக் கடைக்கு அதிகளவில் வருபவர்கள் சாதாரண ஏழை, எளிய மக்கள், தொழி லாளர்களாகும் என இக்கடையின் டீ மாஸ்டர் பச்சையப்பன் கூறியுள்ளார். மேலும், தனக்கும் இக்கடையில் பணி யாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருப வர்களும் இன்முகத்துடன் வந்து டீ குடித்துவிட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -எழில், சேலம்