districts

img

பெரியார் சிலை அவமதிப்பு: இந்து முன்னணியினர் கைது

கோவை, செப்.26- வடசித்தூரில் தந்தை  பெரியார் சிலையை அவம திப்பு செய்த விவகாரத்தில், இந்து முன்னணியினர் உள் ளிட்டோர் கைது செய்யப்பட் டுள்ளனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத் துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நுழைவாயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது கடந்த செப்.20 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சாணி கரைசலை வீசி அவ மதிப்பு செய்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் சமூக இயக்கங்கள் உள்ளிட்ட பல் வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடு பட்டனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளி களை தேடி வந்தனர். இதனிடையே, பெரியார் சிலை அருகே உள்ள செல்போன் டவரில் பதி வான எண்களை சேகரித்து விசாரணை மேற் கொண்டு வந்த போலீசார், சந்தேகத்திற்கிட மாக இருந்த வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ராஜா மற்றும் கோகுல் உள்ளிட்ட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் பெரியார் சிலை மீது சாணி கரை சலை வீசி அவமதிப்பு செய்ததை ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும்  இந்து முன்னணி இயக்கத்தில் இருப்பதும், பெரியாரை அவமதிப்பு செய்யும் என்ற நோக் கில் சாணி கரசலை வீசி சென்றதாக விசார ணையில் தெரிகின்றது. கைது செய்யப்பட்ட இருவரையும் பொள்ளாச்சி இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகாசம் முன்பு நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, பெரியார் சிலை அவமதிக் கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட வர்களை கடுமையான தண்டனைக்கு உள் ளாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை களை முன்வைத்து, பொள்ளாச்சி சமத்துவ புரத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.ஆர். பழனிச்சாமி, தாலுகாச் செயலா ளர் அன்பரசன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.