சேலம், ஜூன் 26- ஏற்காட்டில் புதனன்று காலை நிலவிய கடும் பனிப்பொழிவால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகினர். ‘ஏழைகளின் ஊட்டி’ என்ற ழைக்கப்படும் சேலம் மாவட்டத்தி லுள்ள ஏற்காட்டில் நிலவும் குளு மையான காலநிலையை அனுப விக்க ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட் கள் மற்றும் அரசு தொடர் விடு முறை நாட்களில் சுற்றுலாப் பயணி கள் அதிகளவில் காணப்படும். ஏற் காட்டிற்கு சுற்றுலா வரும் பயணி கள் இங்குள்ள சுற்றுலாத் தலங் களை கண்டு ரசித்து செல்வார்கள். இதனிடையே, கடந்த மே மாத இறு தியில் கோடை விழா மலர்கண் காட்சி நடைபெற்றது. அப்போது சுற் றுலாப் பயணிகள் வருகை அதிக ரித்ததால், ஜூன் 4 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. இதன்பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பய ணிகள் வருகை குறைந்து காணப் பட்ட நிலையில், பக்ரீத் தொடர் விடு முறை நாளில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில், சேலம் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற் காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை நேரங் களில் பலத்த மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங் கள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. மேலும், மாலை நேரங்களில் மழை பெய்வதால், இர வில் கடுங்குளிரும் நிலவி வருகி றது. இதனால் ஏற்காடு பகுதிகளில் மாலை நேரத்தில் மக்கள் நடமாட் டமின்றி வெறிச்சோடி காணப்படு கிறது. இந்நிலையில், புதனன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவி யது. காலை 9 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அள வுக்கு அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. இதனால் பகல் நேரங் களிலேயே வாகன ஓட்டிகள் வாக னங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றனர். இதேபோல் ஏற்காடு சுற்றுவட் டாரப் பகுதிகளிலும் புதனன்று பனி மூட்டம் அதிகளவில் இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழை, கடும் பனிப்பொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் மக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பொது மக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து சென்று வருகின்றனர்.