சேலம், அக். 6- சேலம் மாநகரில் சனியன்று இரவு முழுவதும் மழை கொட்டி திர்த்தது. மழை நீர் சூழ்ந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி னர். சேலம் மாநகராட்சி 60 வார்டு களைக் கொண்டு செயல்பட்டு வரு கிறது. சேலம் மாநகர் முக்கிய பகுதிகளான சேலம் புதிய பேருந்து நிலையம், பச்சப்பட்டி, வென்னங் குடி முனியப்பன் கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சேலம் மாநகரில், மட்டும் 108.5 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. வட்டம் முழுவதும் 478 மிமீ மழை பெய்த நிலையில் சேலம் மாநகரில் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. சேலம் மாநகராட்சி நிர்வாகம் மழைக்கால முன்னேற்பாடுகள் எது வும் செய்யாமல் இருந்ததன் விளை வாக தற்போது சேலம் மாநகரில் ஒரு நாள் மழைக்கு பெருவெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரால் பேருந்து நிலையத்திற்கு உள்ளே இருக்கும் கடைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்த தால் அங்கு விற்பனைக்காக வைக் கப்பட்டிருந்த பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தண்ணீ ரில் மூழ்கி நாசமாகியது. சேலம் சூரமங்கலம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் தண் ணீரில் மூழ்கியது. இருப்பினும் எந்த வார்டு பகுதி களிலும் மழைக்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள், எதுவும் செய்யாமல் இருந்ததன் விளை வாக சாதாரண மழைக்கு கூட தண் ணீர் தேங்கி வருவதாகவும், பொது இடங்களில் அதிகமான அளவில் கழிவு நீர் குடியிருப்பு பகுதி களுக்கு வருவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித் துள்ளனர். வீடுகள் சேதம் சேலத்தில், மாநகராட்சி பெண் கள் மேல் நிலைப் பள்ளியின் சுற்று சுவர் மழைக்கு சேதம் அடைந்து இருந்தது. அப்பகுதியில் சனி யன்று இரவு 108.5 மிமீ மழை பதி வாகி இருந்தது. மழையால் பல் வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இருந்தது. இதில் இரவு 11 மணிக்கு பள்ளியின் சுற்று சுவர் வீடுகளுக்கு மேல் விழுந்துள்ளது. இந்நிலை யில் அங்கு உறங்கிக் கொண்டி ருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந் தது. சாதாரண ஏழ்மை நிலையில் கூலி வேலை செய்து வரும் மக்க ளாக இருப்பதால் பாதிப்பு அடைந்த வீடுகளை சீர்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். பள்ளியில் மேலும் சில பகுதி களில் சுற்றுச் சுவர் சேதம் அடைந் துள்ளது. அதனை முழுமையாக அகற்றி புதிய சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். பள்ளிக்கும் வரும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அர சுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி வெளியா னதை தொடர்ந்து, அரசு நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு சுற்றுலாத்துறை அமைச் சர் இரா.ராஜேந்திரன் பாதிக்கப் பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண் டார். உடன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் இருந்த னர்.