districts

கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு

சென்னை, மே 5-தமிழகத்தில் கடும் வெப் பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.மேலும் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் காலமும் தொடங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் மக்களும் கடும் அவதிப்படுகின்றனர்.இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கடும் வெப்பத் துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னையில் 100 டிகிரிவரை வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும்.திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப் பம் இருக்கும் என்று தெரிவித்தனர்.

;