districts

img

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

திருப்பூர், மார்ச் 28- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக திருப்பூரில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்  படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள்,  அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்க பட்டு வரும் தொகுப்பு ஊதியங்களை கால முறை ஊதியமாக மாற்ற வேண்டும். ஒன்றிய அரசு வழங்குவது போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அரசாணை 115, 139 மற்றும் 152 ஐ திரும்ப பெற வேண்டும்.  அரசுத்துறையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப் பூர் வடக்கு மற்றும் தெற்கு கிளைகள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு  வட்ட கிளை தலைவர் அன்னம் தலைமை  ஏற்றார். மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி கண் டன உறையாற்றினார். இதில், திரளான அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பட்ட்தில் பங்கேற் றனர்.

ஊத்துகுளி

ஊத்துகுளி வருவாய் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டதிற்கு வட்ட கிளை துணைத்தலைவர் தேன்மொழி தலைமை ஏற்றார். மாவட்ட இணை செயலாளரார் ராமன் கண்டன உரை யாற்றினார். சிவசண்முகம் நன்றி கூறினார்.

உடுமலை

உடுமலையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டதிற்கு, வட்டக்கிளை தலைவர் விவே கானந்தன் தலைமை ஏற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி யன் கண்டன உரையாற்றினார். இதில் வட்டக் கிளை செயலாளர் வெங்கிடுசாமி, வரு வாய்த்துறையின் மதன்குமார், வேளாண் துறையின் அமுல்ராஜ், கால்நடை பரா மரிப்புத்துறையின் ஜோதி, கிராம உதவியா ளர் சங்கத்தின் பாலமுருகன், நெடுச்சாலைத் துறையின் செல்லமுத்து, ஓய்வூதியர் சங்கத் தின் விஜயகுமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் மடத்துக்குளம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட் டக்கிளை தலைவர் சிவக்குமார் தலைமை ஏற்றார் வட்டகிளை செயலாளர் முருகசாமி கண்டன உரையாற்றினார். வேளாண் துறை யின் பாலு, வருவாய்துறையின் ராஜேந்திர பூபதி, ஓய்வுதியர் சங்க கருணாநிதி உள்ளிட்ட  திரளானோர் கலந்து கொண்டனர். தாராபுரம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க கிளை  செயலாளர் இல. தில்லையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரசுத்துறை அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.