உடுமலை, ஜூன் 24- உடுமலை அருகே நடை பெற்ற மாநில அளவிலான களரிப் போட்டியில் உடு மலை அரசு கலைக்கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மடத்துக்குளம் அக்க்ஷரா வித்யா மந்திர் கலை அரங் கில் களரிப் பயட்டு அசோசியே சன் ஆப் தமிழ்நாடு சார்பில் 7ஆவது ஆண்டு மாநில அள விலான களரிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த களரிப் போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர். சுவடுகள் பிரி வில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாண வர் சேகுவாரா சீனியர் பிரிவில் முதலிடமும் மற்றும் திவாகர் கொட்டுக்கரி பிரிவில் மூன் றாமிடம், சப் ஜூனியர் பிரிவில் சுவடுகள் சுர் ஜித் முதலிடமும், ஸ்வேதா உருமி வீசல் பிரிவில் முதலிடமும், வீ.ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் கெட்டுக் கரி பிரிவில் முத லிடமும், முத்துச்செல்வம் உரிமி வீசல் பிரிவில் முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா வித்யா லயா பள்ளி தாளாளர் மூர்த்தி, களரிப் பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி ஆகியோர் வாழ்த்தினர்.