districts

வாகனங்களில் எரிவாயு உருளை: அபராதம் விதிப்பு

உதகை, ஏப்.25- உதகைக்கு வாகனங்கள் மூலம் எரிவாயு உருளையே ஏற்றி வந்த சுற்று லாப் பயணிகளுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவ டிக்கை எடுத்துள்ளார். கோடைகாலம் தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்தின் சமவெளி பகுதியில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. மே மாதம் தொடங் குவதற்குள் தமிழகத்தின் 10-க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி வெயில் அடிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குடும்ப மாக சொந்த வாகனங்களில் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் உதகைக்கு வருவதால் அங்கு உள்ள தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்ட ணம் ஆகியவை அதிகளவில் அவர்களி டம் வசூலிக்கப்படுகிறது. இதனால் செலவுகளை கட்டுப்படுத்த நினைக்கும் சுற்றுலாப் பயணிகள் சிலர் வாகனங்க ளில் எரிவாயு உருளை, அடுப்பு, பாத்தி ரம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்து கிடைக் கும் இடத்தில் சமையல் செய்து சாப் பிட்டு செலவை மிச்சப்படுத்தி செல்ல லாம் என்று நினைக்கின்றனர். இதனையடுத்து, 65 சதவீகிதம் வனப் பகுதியை கொண்ட நீலகிரியில் சாலை யோரம் அல்லது வனப்பகுதி ஓரம் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சமை யல் செய்கின்றனர். பருவமழை பாதிப்பு  மற்றும் கோடைமழை இதுவரை பெய் யாததால் வறண்டு போய் உள்ள நீலகிரி வனப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற் படும் சூழ்நிலையில், சுற்றுலாப் பயணி கள் சமையல் செய்வதால் மேலும் தீ விபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள் ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எரி வாயு உருளை உள்ளிட்ட எளிதில் தீ பிடிக் கக்கூடிய பொருட்களை எடுத்து வர  மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  ஆனாலும் அதையும் மீறி சில சுற்றுலாப்  பயணிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நீலகிரி வட்டார  போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் உதகைக்கு வரும் சுற் றுலாப் பயணிகளின் வாகனங்களில் வட் டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி வேலூர் மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் இருந்து பேருந்து மற்றும் வேனில் வந்த சுற்றுலாப் பயணி கள் வாகனங்களில் இருந்த எரிவாயு  உருளைகளை பறிமுதல் செய்யப்பட்டு  அவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.