தருமபுரி, ஜன.18- தருமபுரி பச்சியம்மன் சுடுகாட்டில் குப்பைகளை கொட் டப்படுவதை தடுத்து நிறுத்தி, அங்கு குவிக்கப்பட்டுள்ள குப் பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் பச்சியம்மன் சுடுகாடு அமைந் திருக்கிறது. பல்வேறு சமுதாய மக்கள் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யவும், எரிக்கவும் இந்த சுடு காட்டை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ளதால், திடீர் உயிரிழப்புக்களுக்கு அடக்கம் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில், தருமபுரி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரியின் மூலம் இங்கே வந்து கொட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனி யார் மருத்துவமனையின் குப்பைகளும் இங்கே கொட்டப் படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் மாதக்கணக் கில் தேங்கி மலைபோல் காட்சியளிக்கிறது. மேலும், அடை யாளம் தெரியாத நபர்கள் சிலர் இரவு நேரங்களில் குப் பைக்கு தீயிட்டு செல்கின்றனர். இதனால், உண்டாகும் புகை மூட்டம் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கள் மற்றும் தனியார் பள்ளி, குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பச்சையம்மன் சுடுகாட்டில் குப்பை கொட்டு வதை நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் மருத்துவமனை கள் நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும், கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்றி, சுத்தம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர்.