districts

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதாக மோசடி

கோவை, ஜூன் 12- இரண்டாயிரம் ரூபாய் நோட்டு களை மாற்றித்தர 15 சதவீதம் கமிசன் என்று கூறி வியாபாரியிடம் ரூ.1.27 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தங்க நகை வியா பாரி. இவர் தனியார் வங்கி ஒன்றில்  வீட்டுக்கடன் வாங்கினார். அந்த வங்கி மேலாளர் குட்டி என்பவரை பிரகாசுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிரகாசி டம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக  500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என்றும், அதற்கு சிலர் இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் ரூ.1 கோடிய 27  லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு களுடன் ஆனைமலையை அடுத்த அம் பராம்பாளையம் சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பிரகாசிடம் இருந்த பணத்தை பறித் துச் சென்றனர். பணம் பறித்துச் சென்ற  கும்பலை கோவை போலீசார் 12 மணி  நேரத்தில் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பத்ரி நாரா யணன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், இந்த பணம் பறிப்பு சம்பந்தமாக ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம், 2 கார்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் கொள்கை சம்பவத்துக்கு பயன்படுத்த காரின் பதிவு  எண்ணைகொண்டு விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள் மதுரை அருகே உள்ள உசிலம் பட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந் தது. உடனடியாக தனிப்படை போலீ சார் அங்கு விரைந்து சென்று 6 பேரை யும் கைது செய்தனர். பின்னர் அவர்களி டம் இருந்து பங்கு போட்டு பிரிக்கப் பட்ட ரூ. 1 கோடியே 27 லட்சத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்ப வம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர்.   எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு  உரிய அவகாசம் கொடுத்துள்ளது.  இது  போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றார். மேலும், இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்துள்ளோம். அவர்கள் ஆவணங் களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.