கோவை, டிச. 10- திமுக முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் செவ்வாயன்று கால மானார். அவரின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந் தில்பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுகவின் கோவை மக் களவைத் தொகுதி உறுப்பின ராக 1980 ஆம் ஆண்டு இருந்தவர் இரா. மோகன். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 1989 ஆம் ஆண்டு சிங்கா நல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். திமுக வின் மூத்த உறுப்பினரான இவர் கடந்த பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப் பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற் கொண்டு வந்தார். இந்நிலையில் செவ்வா யன்று காலை அவரது இல்லத்தில் காலமா னார். அவரது உடலுக்கு, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.