districts

img

உணவு பாதுகாப்பு பயிற்சி

தருமபுரி, ஜூலை 7- நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி ஞாயிறன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில்,  மொரப்பூர் மற்றும் பொம்மிடி பகுதியிலுள்ள பொது விநி யோகத்திட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்க ளுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப் படை பயிற்சி, ஞாயிறன்று மொரப்பூர் வட்டார வளர்ச்சி  அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சார்பதிவாளர்கள் ராமன், அர்ச்சனா ஆகியோர் முன் னிலை வகித்தனர். மொரப்பூர் துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் சங்கீதா வரவேற்றார். மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சிறப்புரை யாற்றினார். சென்னை லிட்மஸ் புட் அனல்டிக்கல் பயிற்று நர் அருண் பேசினார். இந்நிநிகழ்வில் துணை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், நசீர்கான் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.