ஏற்காடு மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு
சேலம், ஜூன் 11- ஏற்காட்டில் பெய்த கன மழையால், மலைப்பாதை யில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளில் திங்களன்று மழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, டேனீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. ஏற்காட்டில் திங்களன்று மதியம் 2.30 மணிக்கு தொ்டங்கிய மழை 3.30 மணி வரை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது. ஏற்காடு ஒண்டிக்கடை பேருந்து நிலையம், நகரப்பகுதி, செங்காடு, மஞ்சகுட்டை, வாழவந்தி, கொம்பக்காடு, நாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கனமழை வெளுத்து வாங்கி யது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளை கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஏற்காடு மலைப் பாதையில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்த னர். மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதேபோல டேனீஸ்பேட்டை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஆனைமடுவு, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் மழை லேசான தூரலுடன் நின்று போனதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விளம்பர பதாகை விழுந்து ஒருவர் காயம்
சேலம், ஜூன் 11- ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை விழுந்து, ஒருவர் காயமடைந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, விழுப் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், ஆத்தூர் சுற்று வட்டார கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும், இந்த பேருந்து நிலைய வளாகத்தின் மேல் பகுதியில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை ஒன்று திடீ ரென, பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த பயணி மீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா கமால், பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, விளம்பர பதாகைகளை அகற்ற அறிவு றுத்தினார். அதன்படி, உடனடியாக விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.
குறைதீர் கூட்டம்
சேலம், ஜூன் 11- சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்ட மின்வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்க கிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதனன்று (இன்று) காலை 11 மணி முதல் முற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், சங்க கிரி மின் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு, மின்சாரம் விநியோகம் தொடர்பான தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.உமா ராணி தெரிவித்துள்ளார்.
பட்டா மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தல்
தருமபுரி, ஜூன் 11- மோசடியாக மாறுதல் செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (48). இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அளித்த மனுவில், எனது தந்தை வேலன் என்ற முனுசாமி, கடந்த 2012 ஆம் ஆண்டு, தான செட்டில்மென்டாக ராயக்கோட்டையில் உள்ள விவசாய நிலத்தை எனக்கு வழங்கினார். அந்த நிலத்தில், தற்போது விவசாயம் செய்து வருகிறோம். எனது பெயரில் வழங்கப்பட்ட தான செட்டில்மென்ட் பத்திரத்தை, எனது தந்தை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு கடந்தாண்டு டிச.10 ஆம் தேதியன்று கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர், எனது பெயரில் உள்ள நிலத்தை, தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர். எனவே, மோசடியாக மாறுதல் செய்த பட்டாவை ரத்து செய்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.