மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக 9 செ.மீ அளவிற்குப் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும், இயல்பு நிலைக்கு வந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.