districts

img

20 ஆவது நாளாக விவசாயிகள் மறியல்; கைது

சேலம், பிப்.26- பேரூராட்சி பகுதியில் சேகரமா கும் கழிவுகளை குறுக்குப்பாறை யூரில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு மறியலில் ஈடுபட்ட விவ சாயிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், அரசிராமணி பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைக்கழிவுகளை, ஏற்கனவே கொட்டிய இடத்தை விட்டுவிட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன்  குறுக்குப்பாறையூரில் கொண்டு  வந்து கொட்டினர். விவசா யத்தையும், பொதுமக்களையும் பாதிக்கிற இம்முடிவைக் கண் டித்து, கடந்த 8 மாதங்களாக அப் பகுதி விவசாயிகள் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப்பாக, குப்பைக்கொட்டப்படும் குறுக்குப் பாறையூரில் குப்பைக் கொட்டும் வாகனங்களை சிறைப் பிடித்தல், மறியல் என கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  தலைமையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகி றது. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளரு மான பெ.சண்முகம், நகர்ப்புற உள் ளாட்சித்துறை அமைச்சரிடம் தெரி வித்தார். மாவட்ட ஆட்சியரிடம் பணியை நிறுத்த அமைச்சர் கூறி யும், தொடர்ந்து குப்பைக்கொட்டும்  பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சங்ககிரி கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு புத னன்று அனைத்துக்கட்சிகள் சார் பில் மறியல் போராட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலூகா செயலாளர் ஏ.ஆறு முகம் தலைமை வகித்தார். இதில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன், விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, துணைத்தலைவர் பி. தங்கவேலு, மூத்த தோழர் வி.கே. வெங்கடாஜலம், தாலூகா தலை வர் ஆர்.ராஜேந்திரன், விசிக தொகுதி பொறுப்பாளர் பெருமாள்,  மதிமுக நகரச் செயலாளர் கதிர், காங்கிரஸ் நகரச் செயலாளர் ரவி, தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றியச் செயலாளர் நடேசன், அரசிராமணி பேரூர் செயலாளர் ராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் குருசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், பால்  உற்பத்தியாளர்கள் சங்க மாவட் டச் செயலாளர் மணி உட்பட 500க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். முடிவில், கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.