districts

img

மஞ்சள் அறுவடையில் ஜேசிபி இயந்திரம் உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை - - கோ.மகேஷ்வரன் -

- கோ.மகேஷ்வரன் - கோபி, பிப்.21- வேலை ஆட்கள் பற்றாக்குறை யின் காரணமாக, கோபி அருகே  மஞ்சள் அறுவடை செய்ய ஜேசிபி இயந்திரத்தை விவசாயிகள் நாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி மற் றும் டி.என்.பாளையம் சுற்று வட் டாரப் பகுதிகளில்  ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்து வந்தனர். இதில்  நாட்டுமஞ்சள், பிடிஎஸ், 8 நம்பர், சுகுணா, சுதர்ஷ்னா, சேலரகம் உள் ளிட்ட பல்வேறு ரகங்களில் விவசா யிகள் மஞ்சள் சாகுபடி மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி அதிகமானதால் மஞ்சள் உற்பத்தி அதிகரித்து மஞ்சளின் விலை குறைந்து காணப்பட்டு வந்தது. இதனால், ஈரோடு மாவட் டத்தில் மஞ்சள் சாகுபடி வருடத் திற்கு வருடம், மஞ்சள் உற்பத்தி  குறைந்து வந்தது. கடந்த சில வரு டத்திற்கு முன் மஞ்சள் விலை திடீ ரென ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால், சில நாட்களில் மீண்டும் குறைந்தது மஞ்சளுக்கு போதிய விலை இல்லாத்தால் விவ சாயிகள் மாற்று பயிர் விவசாயத் திற்கு மாறினர். இதனையடுத்து கோபி, டி.என்.பாளையம், பெரு முகை, செம்புளிச்சாம்பாளையம், அத்தாணி, உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் சில நூறு ஏக்கர் பரப்பள வில் மட்டும் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டனர். இந்நிலையில், மஞ்சள் சாகு படி அறுவடைக்கு தயாராகி தற் போது கோபி, டி.என்.பாளையம் வட்டாரத்தில் மஞ்சள் அறுவ டையை தொடங்கி உள்ளது. ஆனால், அறுவடை செய்ய ஆட் கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த நாட்களுக்குள் மஞ்சளை அறுவடை செய்ய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதால், புதிய முயற்சியாக சிறியரக ஜேசிபி இயந்திரம் மூலம் மஞ்சள் அறு வடை செய்வதை தொடங்கியுள்ள னர். மஞ்சள் சாகுபடி செய்த விவசா யிகள் ஆட்கள் பற்றாகுறையால் அறுவடையை தடையின்றி தொட ரவும் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இதனால், கோபி வட்டாரத்தில் மஞ்சள் சாகு படி செய்த விவசாயிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மஞ்சள் (வெட்டி)  அறுவடை செய்வதை நேரில் பார்த்து தங்களது விவசாய நிலங்க ளில் மஞ்சள் அறுவடை செய்ய இயந்திரத்தை நாடி வருகின்றனர். இதுகுறித்து மஞ்சள் சாகுபடி விவசாயிகள் கூறுகையில், கடந்த  சில ஆண்டுகளாக மஞ்சளுக்கு  போதிய விலை கிடைக்காததால்,  இந்தாண்டு மஞ்சள் சாகுபடி குறைந் தது. இதனால், குறைந்த நிலப் பரப்பில் மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். இந்தாண்டு மஞ் சள் விளைச்சல் அமோகமாக உள் ளது. இருப்பினும் மஞ்சள் விலை  ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே விற் பனை ஆகிறது. ஈரோடு மாவட்டத் தில் சாகுபடி செய்யும் மஞ்சளில் வேதி பொருள் தன்மை அதிகமாக காணப்படுகிறது. ஆனால், இந்த மஞ் சளுக்கு உரிய விலை இல்லை என்ப தால் மஞ்சள் சாகுபடி குறைந்து வருகிறது. மேலும் ஆட்கூலி, ஆள் பற்றாகுறை என பல்வேறு இன் னல்களுக்கு மத்தியில் மஞ்சள் சாகுபடி செய்து அறுவடை செய்து  விற்பனை கொண்டு சென்றால்  எதிர்பார்த்த விலை கிடைப்ப தில்லை. மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்றும் ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்த மஞ்சளில் உரிய  வேதித்தன்மை அதிகமாக காணப் படும். கடந்த காலங்களில் தங்கத் தின் விலையை விட மஞ்சள் கூடு தல் விலைக்கு விற்பனை ஆனது என்கிறார்கள். ஆனால் தற்போது  தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை  தாண்டிவிட்டது. ஆனால், விவசாயி கள் சாகுபடி செய்யும் மஞ்சளின் விலை ரூ.15 ஆயிரத்திற்கு மட்டுமே  விற்பனை ஆகிறது. எனவே, வரும் காலங்களில் ஒன்றிய, மாநில அரசு கள் மஞ்சளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்தால் மட்டுமே மருத் துவம் குணம் நிறைந்த மஞ்சளை சாகுபடி செய்ய முடியும். எனவே, அரசு தக்க நடவடிக்கை எடுத்து மஞ்சள் சாகுபடியை ஊக்குவித்து மஞ்சள் அறுவடை காலங்களில் ஆள் பற்றாகுறையை சமாளிக்க, இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.