districts

img

இறந்த ஆட்டுடன் விவசாயி போராட்டம்

நாமக்கல், பிப். 24- தனது ஆட்டை வெறி நாய்கள் கடித்துக் கொன்றதாக கூறி    இறந்த ஆட்டுடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலிய னூர் கிராமத்தில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. மேலும் அங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகள், கோழிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பரா மரித்து வருகின்றனர். களியனூர் கிராமம் மற்றும் சமய சங்கிலி  காவிரி கரையோரம் அடிக்கடி மேய்ச்சலில் உள்ள ஆடு களை, வெறி நாய்கள் கடித்துக் கொல்வது அடிக்கடி நடைபெ றும் சம்பவங்களாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆடு களை வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்துள்ளது. இந் நிலையில், களியனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்ற  விவசாயி திங்களன்று தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்ச லில் விட்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட  வெறிநாய்கள் ஆட்டை கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் ஆடு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தொடர்ந்து  இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், வெறி  நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை, ஆடு வெறிநாய் தாக்கப்பட்டவுடன் கால்நடை அவ சர ஊர்திக்கு அழைத்தபோது எவ்வித முறையான பதிலை யும் ஊழியர்கள் அளிக்கவில்லை. இதன் காரணமாக ஆடு  துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது எனக்  கூறி இறந்த  ஆட்டுடன் களியனூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திடீர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளை யம் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், விவ சாயி மகேஸ்வரனை சமாதானப்படுத்தினர். உரிய இழப்பீடு  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை  தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.