திருப்பூர், செப்.21- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்ட குட்டையில், ஈட்டிவீரம்பா ளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை மலை போல் கொட்டியுள்ளது. இப்பிரச்சனை யில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன் சனியன்று மாவட்ட அட்சியர் தா.கிறிஸ்து ராஜிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்க ளின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவு அத் திக்கடவு - அவிநாசி திட்டம். பல கட்ட போராட் டங்களுக்கு பிறகு தற்போதுதான் பணிகள் முழுமை பெற்று செயல்பாட்டிற்கு வந்துள் ளது. இத்திட்டத்தில் விடுபட்டுள்ள குட்டை களை இணைக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங் கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலை யில், இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட குட் டையில் மலை போல் குப்பைகள் கொட்டப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டியங்கிணறு பகுதியில் அமைந் துள்ள குட்டை, அத்திக்கடவு அவிநாசி திட்டத் தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக் கப்படும் குப்பைகளை ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இந்த குட்டையில் கொட்டி வருகிறது. இதனால், துர்நாற்றம் வீசி அக்கம்பக்கத் தில் உள்ள குடியிருப்புகளில் இருக்க முடிய வில்லை என பொதுமக்கள் புகார் அளிக்கின்ற னர். மேலும், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக் கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் மாறி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே, இது போன்ற செயலில் ஈடுப டுவது மிகவும் வருந்தத்தக்கது. எனவே தாங் கள் உடனடியாக இப்பிரச்சனையில் தலை யிட்டு குட்டையில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.ாளியப் பன் கேட்டுக் கொண்டுள்ளார்.