திருப்பூர், ஜூன் 16 – திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி யில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வந்த அவுட் சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர்கள் ஐம்பது பேரை வேலையை விட்டு நீக்குவதென ஒப்பந் ததாரர் முடிவு செய்தார். ஆனால் இதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் சிஐடியு தலைமை யில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி யதைத் தொடர்ந்து வேலை நீக்க முடிவு கைவி டப்பட்டது. தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளில் தூய்மைப்பணியை தனியார்மயமாக்குவ தென கொள்கை முடிவு எடுத்து, அந்தந்த நக ராட்சிகள் மட்டத்தில் அமல்படுத்தி வருகிறது. இந்த முடிவுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் நேரடி ஒப்பந்த முறை யில் தினக்கூலி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அரசு நிர்வாகம் நிர்ண யித்திருக்கும் சட்டப்படியான குறைந்தபட்ச கூலியைக் கொடுத்து வந்தனர். தூய்மைப்பணி தனியார்மயம் என முடிவு செய்யப்பட்ட நிலையில் அயல்பணி (அவுட் சோர்சிங்) முறையில் இதை உரிமம் பெற்றி ருக்கும் ஒப்பந்ததாரர்கள், தற்போது அந்தந்த நகராட்சிகளில் ஏற்கெனவே பணி செய்து வரும் தினக்கூலி பணியாளர்களின் சம்பளத் தைக் குறைக்கவும், ஆட்களைக் குறைக்க வும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது பல்வேறு பகுதிகளிலும் தொழிலா ளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்லடம் நக ராட்சியில் தூய்மைப்பணி மேற்கொள்ள அவுட்சோர்சிங் ஒப்பந்தம் பெற்றிருக்கும் ஒப்பந்ததாரர் 50 தூய்மைப் பணியாளர்களை வேண்டாம் என்று ஆட்குறைப்பு செய்திருக்கி றார். இந்த விபரம் தொழிலாளர்கள் மூலம் சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கத்தின் நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து வெள்ளியன்று காலை பல் லடம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்து தூய்மைப்பணியாளர்கள் ஊர்வல மாக பல்லடம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தூய்மைப்பணியாளர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். அத்துடன் பல்லடம் நகராட்சி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணை யாளர் விநாயகம், நகர்மன்ற தலைவர் ஆர். கவிதாமணி ஆகியோர் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எஸ்.பரமசிவம் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர் சங்கத்தின ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா, ஈஸ்வரி இருவரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உடன் வந்திருந்தனர். இதில் யாரையும் வேலையை விட்டு நீக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் அளித்தனர். அதன்பின் 4 மணி நேரம் நீடித்த தூய்மைப்பணி யாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் முடி வுக்கு வந்தது.