தருமபுரி, மார்ச் 17- தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் தருமபுரி மேற் பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு,சிஐடியு மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமை ஏற் றார். திட்டசெயலாளர் தீ.லெனின் மகேந்திரன், பொருளாளர் சீனிவாசன், ஏயூஎஸ்யு மண்டல செயலாளர் திருமால், ஏடிபி மண்டலசெயலாளர் சாந்தமூர்த்தி, பொறியாளர் சங்க திட்ட செயலாளர் முரளி, டிஎன்பிஇஒ மாநில செயலாளர் முனிராஜ், தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டிபோர்டு எம்ளா யூஸ் பெடரேசன் திட்டசெயலாளர் கோகுல் தாஸ், ஏஐசிசிடியு மாநிலத்தலைவர் சி. முருகன், என்எல்ஒ திட்டசெயலாளர் தர்ம லிங்கம், அம்பேத்கர் எம்ளாயீஸ் பெடரேசன் யூனியன் வினோத், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூரத்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், 22.2.2018 இல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்கவேண்டும். 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறைக்கு விடாக்கூடாது. அரசாணை 100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற வகையில் அரசு உத்தரவா தத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற் படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.