districts

img

தண்ணீர் தொட்டிகளை தேடி வரும் யானைகள்

மேட்டுப்பாளையம், பிப்.22- கோடை கால வறட்சியை சமாளிக்க  காட்டு யானைகள் உள்ளிட்ட வன உயிரி னங்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் சீர மைத்து நீர் நிரப்பட்டதால், யானைகள்  தண்ணீர் தொட்டிகளை தேடி வருகி றது. கோவை வனக்கோட்டத்திற்குட் பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை,  காரமடை வனச்சரகப் பகுதிகளில்  காட்டு யானைகளின் நடமாட்டம் அதி கம் காணப்படும்.தமிழ்நாடு, கேரளம்  மற்றும் கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் வழித்தடப்பாதை இவ் வனப்பகுதியில் உள்ளதால் வலசை செல்லும் யானைக்கூட்டங்கள் கடந்து செல்வது வழக்கம். வலசை செல்லும் யானைகள் தங்களது தண்ணீர் தேவைக்காக காட்டை ஒட்டியுள்ள கிரா மங்களுக்குள் புகுவதை தடுக்கும் நோக்கில் வனத்தினுள் ஆங்காங்கே சுமார் 32 இடங்களில் தண்ணீர் தொட்டி கள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டி யில் இருக்கும் நீரை அருந்தும் யானை கள் அமைதியாக கடந்து சென்று விடு கின்றன. யானைகள் சுத்தமான நீரை மட்டுமே அருந்தும் இயல்புடையவை என்பதால் சில நேரங்களில் காட்டெருது கள், காட்டுப்பன்றிகள், மான் போன்ற பிற விலங்கினங்கள் நீர் அருந்தி விட்டு  செல்லும் தண்ணீர் குறைவாக கலங் கிய குட்டைகளில் யானைகள் நீர் அருந்துவதில்லை. மேலும் கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கி பகல் நேரங்களில் வெயில்  வாட்டி வருவதால், மேட்டுப்பாளை யம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்திற் குட்பட்ட காடுகளில் உள்ள இயற்கை யான நீராதாரங்கள் வறண்டு போக  துவங்கி வனக்குட்டைகளில் குறைந்த அளவே தற்போது தண்ணீர் உள்ளது.  இதனால், தூய்மையான நீரை தேடி  யானைகள் பரிதாபமாக அலையும் சூழல் உருவாகி வருகிறது. காட்டுக் குள் தண்ணீர் கிடைக்காத போது  அருகில் உள்ள குடியிருப்புகளில்  புகும்  யானைகளால் யானை மனித மோதல் கள் அதிகரிக்கும். இதனால், தற் போது வனத்துறை அதிகாரிகள் நேரடி  மேற்பார்வையில் வனப்பணியாளர்கள்  தொட்டிகளை சுத்தம் செய்து வருவ தோடு அதில் நீர் நிரப்பப்பட்டு வரு கின்றன. தண்ணீர் தொட்டிகளில் தற் போது புதிய நீர் நிரப்பட்டு வருவ தால் காட்டு யானைகள் நீரைத்தேடி மீண்டும் தண்ணீர் தொட்டிகளை நோக்கி வரத்துவங்கியுள்ளன. தொட்டி களில் உள்ள தண்ணீரை அருந்தும் யானைகள் மீண்டும் காடுகளுக்குள் திரும்பி செல்கின்றன.