உதகை, ஏப்.19- கூடலூர் அருகே சுற்றுலா வாகனங் களை காட்டு யானைகள் துரத்தியதால் சுற்றுலாப்பயணிகள் அச்சத்தில் அலறினர். கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் வனத்திற்குள் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர், உணவு ஆகிய தேவை களுக்காக வன விலங்குகள் ஊருக்குள் படை யெடுக்கும் நிலை பல பகுதிகளில் தொடர்கி றது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில் வெள்ளியன்று காலை இரண்டு காட்டு யானைகள் சாலைக்கு வந்தது. அப்போது அந்த வழியாக சுற்று லாப் பயணிகள் வாகனங்களில் தொடர்ந்து வந்தனர். யானைகள் சாலையில் உலவு வதை கண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டி ருந்தனர். அப்போது திடீரென இரண்டு காட்டு யானைகள் வாகனங்களை விரட்ட துவங்கி யது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அலறி னர். சிறிது தூரம் விரட்டி வந்த யானைகள் பின்னர், சாலையைக் கடந்து வனத்திற்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், , வனத்துறையினர் வனவி லங்குகளை புகைப்படம் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வந்தா லும் சுற்றுலாப் பயணிகள் வீடியோக்கள் எடுப்பதற்காக வாகனங்களை நிறுத்தி ஆபத்தை உணராமல் நடந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால், வெகு இயல் பாக வன விலங்குகள் சாலைகளிலும், ஊருக்குள்ளும் வந்து விடுகிறது. வனத்துறை யினர் வனப்பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆங்காங்கே வைக்கப்பட் டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பு வதும், பழங்கள், காய்கறிகள் போன்ற வற்றை ஏற்பாடு செய்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும் என்றனர்.