districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருப்பூரில் மின் ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், பிப்.25- தமிழ்நாடு மின் வாரியத்தில் 60 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார் பில் செவ்வாயன்று தர்ணா போராட் டம் நடைபெற்றது. மின் வாரியத்தில் உள்ள ஆரம்பக் கட்ட காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர்  திட்டத்தை புகுத்தக் கூடாது. ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தையை உடனடி யாக துவக்கிட வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 2019 டிசம்பர் 1 முதல் 2023  மே 16 வரை பணியில் சேர்ந்தவர்க ளுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க  வேண்டும். ஊதிய உயர்வு இடைக் கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க  வேண்டும். கேங்மேன் பதவியை கள  உதவியாளர் பதவியாக மாற்ற வேண் டும். ஒப்பந்த பணியாளர்களை அடை யாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண் டும். பகுதி நேர பணியாளர்களை நிரந் தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார் பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட் டம் நடத்தப் போவதாக அறிவித்திருந் தனர். அதன் அடிப்படையில் செவ்வா யன்று திருப்பூர் குமார் நகர் செயற்பொ றியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட் டப் பொருளாளர் மோகன்தாஸ் தலை மையில் தர்ணா போராட்டம் நடைபெற் றது. இதில், மாவட்டத் தலைவர் வீரன், மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம் பத், துணைத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில் திரளான மின் ஊழியர்கள் பங் கேற்றனர்.  உடுமலை  உடுமலை மின்வாரிய அலுவல கத்தின் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடை பெற்ற தர்ணா போராட்டத்த்தில், சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர்  ஜெக தீசன் துவக்கி வைத்து பேசினார். மேலும், சங்கத்தின் நிர்வாகிகள் கோவிந்தன், ஜெகானந்தா, பாலசுப்பிர மணியன், மதுசூதணன், வெள்ளியங் கிரி, செல்வராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  அதேபோல் பல்லடத்தில் மின் வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, மின் ஊழியர்  மத்திய அமைப்பு செயலாளர் ராமலிங் கம் தலைமை வகித்தார். இதில், 70 க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.