districts

img

வாக்காளர் திருத்தப் பணிகள் 97 சதவீதம் நிறைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தகவல்

திருப்பூர், டிச.28- திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் குறுத்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் 97 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பி.மகேஸ்வரி தெரிவித் தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக் காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி முன்னேற்றம் குறித்த  ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பி. மகேஸ்வரி தலைமையில் சனியன்று அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டி யல் பார்வையாளர் பி.மகேஸ்வரி கூறியதாவது, திருப்பூர்  மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமில் படிவம் 6 பெயர் சேர்தலில் 33587  விண்ணப்பங்களும், படிவம் 7 பெயர் நீக்கத்திற்கு 18019 விண் ணப்பங்களும், படிவம் 8 பெயர் திருத்தம் 30461 விண்ணப்பங் களும் பெறப்பட்டு தகுதியான வாக்காளர்களின் விபரம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச்  சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் 97 சதவீதம் முடிக்கப் பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண் டார்கள்.