districts

img

மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை கேள்விக்குறியாக்கும் கல்வித்துறை அதிகாரிகள்

உடுமலை ஜூன் 29- மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஆரம் பக் கல்வி கற்க மலைவாழ் குடியிருப்பு பகுதி யில் அரசு ஆரம்ப பள்ளிகள் அமைந்துள்ளது.  இப்பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் மற் றும் ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தை களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உடுமலை  தாலுகா பகுதிக்கு உட்பட்ட திருமூர்த்தி மலை, மேல்குருமலை, கீழ்குருமலை, குழி பட்டி, மாவடாப்பு மற்றும் பூச்சிக்கொட்டாம் பாறை மலைவாழ் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.  இம்மக்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்க திருமூர்த்திமலை, கீழ்குருமலை, குழிபட்டி மற்றும் மாவடாப்பு பகுதியில் அரசுப் பள்ளிகள் கட்டபட்டுவுள்ளது. மேலும் திருமூர்த்திமலை தவிர மற்ற மூன்று பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் உள்ளது. இங்கு வேலைக்கு வரும் ஆசிரியர்கள் தங் குவதற்குத் தனியாகப் பள்ளியின் அருகில்  கட்டிடம் உள்ளது. ஆனால் இந்த பள்ளிக் குப் பல வருடங்களாகப் பெயருக்கு மட்டுமே  மாதம் ஒரு முறை ஆசிரியர்கள் வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர் வாகிகள் கூறுகையில்: எங்கள் குடியிருப்பு பகுதியில் தமிழக அரசின் சார்பில் மூன்று  ஆரம்ப பள்ளிகள் உள்ளது. இந்த கட்டி டங்கள் முறையாகப் பராமரிப்பது இல்லை. மிகவும் சிதமலைடைந்துள்ளது. இது குறித்து  அதிகாரிகளுக்குத் தெரிவித்தால் எவ்வித நட வடிக்கையும் எடுப்பது இல்லை. கடந்த வரு டம் குழிபட்டி கட்டிடம் மிகவும் பாழ்யடைந் துள்ளது என்று தீக்கதிர் நாளிதழில் செய்தி  வந்தது. இந்நிலையில் சென்ற வாரம் பெய்த  மழையில் கட்டிடம் இடிந்து விட்டது. ஆசிரி யர்கள் வராத காரணத்தால் குழந்தைகள் பள் ளிக்கு செல்லவில்லை இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து உடு மலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 29  ஆம் தேதி பொறியாளர் சுப்பிரமணி மற்றும்  அதிகாரிகள் மழைக்கு இடிந்த குழிபட்டி பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்தார் கள். அப்போது கீழ் குருமலையில் பள்ளிக் கட் டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது  என்றும் அந்த கட்டிடத்தையும் ஆய்வு செய் யக் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதிகா ரிகள் அதைக் கண்டு கொள்ளாமல் மாவ டாப்பு பகுதிக்கு சென்று விட்டார்கள்.  மேலும் இந்த மூன்று பள்ளிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் உள்ளார்கள். தினமும் தங்கி வேலை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே வரு கிறார்கள். இது குறித்து மாவட்ட கல்வி அதிகா ரிக்குப் புகார் தெரிவிக்க சென்றால் புகாரை  வாங்க மறுத்துப் போய் வேலையை பாருங் கள் என்று மிரட்டும் வகையில்  பதில் அளிக்கி றார். முறையான ஆரம்பக் கல்வி இல்லாத தால் ஆறாம் வகுப்புக்கு மேல்நிலைப் பள்ளி களுக்குச் செல்லும் குழந்தைகள் கல்வி  கற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு  பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டுவிடுகிறார் கள். மாவட்ட நிர்வாகம் முறையாக  ஆய்வு செய்து தவறு செய்து வரும் ஆசிரியர் மற்றும்  கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

;