மே.பாளையம், ஜூலை 13- மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் வனப்பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணை நாட்டிலேயே முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் தூர்வாரப்படு கிறது. தமிழக - கேரள எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் இரு மலைகளுக்கு இடையே கடந்த 1961 இல் கட்ட துவங்கி 1966 இல் பயன் பாட்டிற்கு வந்தது. இந்த அணை 1170 அடி நீளம், 21 அடி அகலம் கொண்ட அணையின் கொள்ளளவு 1,280 டி.எம்.சி. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி 3000 கன அடி தண் ணீரை வெளியேற்றி நீர்மின் உற் பத்தி செய்யும் இரண்டு மின் உற் பத்தி ஜெனரேட்டர் அமைக்கப்பட் டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்பிடிப்பு பகுதி களான இந்த அணையை கட்டி 58 ஆண்டுகளாகியும் இதுவரை தூர் வாரப்படவில்லை. இதனால் அணை யில் தற்போது 50 அடிக்கும் மேல் சேறும் சகதியும் நிறைந்துள்ளது. போதுமான நீர்வரத்து இருந்தும் அணையில் பாதியளவு மட்டுமே நீரை தேக்கி வைக்க முடிகிறது. இதனால் கோவை, திருப்பூர் மாந கராட்சிகள் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட குடிநீர் திட்டங்களுக்கு இங்கி ருந்து தண்ணீர் எடுக்க இயல வில்லை. அணையை தூர்வாரியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு கோவை மாநகராட்சி தள்ளப்பட் டது. அணையில் நீர் வற்றும் போது தூர்வாரலாம் என்றால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அணை யில் நீர் சூழ்ந்தே காணப்படும். மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அணையில் இருந்து 2 கோடியே 60 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண்ணை நூற்றுக்கணக் கான லாரிகள் மூலம் மலைப்பாதை யில் எடுத்து வந்து தரைப்பகுதிக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்துவ தும் சாத்தியம் இல்லாதது. மேலும், வனச்சூழல் பாதிப்பு காரணமாக வனத்துறை அனுமதி கிடைக்காது. இதனால், அணையில் நீர் இருக்கும் போதே தூர்வாரும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த அணையை பராமரித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கம் முடிவு செய்தது. இதற்காக கடல் முகத்துவாரங்களை தூர் வாரும் “டிரெஜ்ஜர்” இயந்திரம் பயன்படுத் தப்படுகிறது. பில்லூர் அணை இந் தியாவிலேயே முதல் முறையாக “ஜியோ டியூப்” தொழில் நுட்பத் தில் தூர்வாரப்படுகிறது. டிரெஜ்ஜர் இயந்திரம் மூலம் அணையின் அடிப் பகுதியை ஆழப்படுத்தி ஜியோ டியூப் தொழில்நுட்பம் மூலம் மண்ணை எடுக்க திட்டமிடப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 25 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண்ணை மட்டும் அணையில் இருந்து அப்புறப்படுத்தி அதனை அணையில் இருந்து கீழே கொண்டு வராமல் மெகா சைஸ் ஜியோ டியூப் களில் நிரப்பி சேகரிக்கப்படும். ஜியோ டியூப் ஒரு வித துணி போன் றது என்பதால் மண் நிரம்பிய டியூப் அங்கேயே வைக்கப்பட்டு அணை யின் கரைகள் பலப்படுத்தப்படும். அகற்றப்பட்ட மண் கரைந்து மீண் டும் அணையில் செல்லாதவாறு ஜியோ டியூப் பாதுகாக்கும். அணை யில் தேங்கியுள்ள 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை ஜியோ டியூப் மூலம் தூர்வார இய லுமா? என்பதை தெரிந்து கொள்வ தற்கான பைலட் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் அணையின் மொத்த வண்டல் மண்ணும் தூர் வாரப்படும். இதற்காக கேரளாவில் இருந்து டிரெஜ்ஜர் இயந்திரங்கள் பில்லூர் அணை பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் தூர் வாரும் பணிகள் துவங்கும் வகை யில் இயந்திரங்களை பொருத்தி முன்னோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.