திருப்பூர், ஜூலை 21 - திருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங் கக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவ லகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகராட்சி 37ஆவது வார்டு கல்லம்பாளையம் பகுதியில் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். இந்த இடத்தில் அவர்கள் மின் இணைப்பு பெற்றுள்ளதுடன், மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடி நீர் வரி ஆகியவற்றையும் செலுத்தி வரு கின்றனர். ஆனால் தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான வண்டிப்பாதை இடம் என வரு வாய் கிராம கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை கணக் கில் எடுத்துக் கொள்ளாமல் 30 ஆண்டுக ளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் தங்கள் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற இப்போராட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். போலீ சார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.