districts

img

வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.23- ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் வேலை  நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டக் கோரிக்கைகளை விளக்கி வங்கி ஊழியர் சங்கங் கள் கூட்டமைப்பின் சார்பில், திங்களன்று திருப்பூர் டவுன் ஹால் யூனியன் வங்கி கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் கன்வீனர்  மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் யூனியன் வங்கி கார்த்தி, எஸ்பிஐ வங்கி கார்த்திக்,  என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இதில் வங்கி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.